முல்லை யேசுதாசன் இறப்புத் திருவோலை

மாவீரன் தந்தை..

தமிழீழ மக்களே எங்கள் ஈழத்துக்கு தன திறமை கொண்டு செறிவூட்டிய இந்த தந்தை முல்லை யேசுதாசன் அவர்கள் நேற்று இறந்துவிட்டார்..

ஆனால் இங்கே ஈழம் ஈழம் என்று வாய் கிழிய வீரம் பேசும் போலிகள் அவர் இறந்தது கூட தெரியாது வடக்கில் வாழ்கின்றனர்..

இவர்தான் ஈழத்து விடுதலைப்புலிகளின் குறும்படம் மற்றும் முழுப்படங்களில் நடித்து விடுதலை புலிகளுக்கும் மீனவர்களின் துன்பங்களையும் மக்களுக்கு எடுத்து சென்ற சிறந்த மனிதன்..

இவர் ஒரு நடிகனாக வாழ்ந்தாலும் இவர் உடைந்த படகுகளை ஒட்டியே அதில் வரும் ஊதியத்தில் வாழ்ந்தவர்..

புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பெயரையும், மாவீரர்கள் பெயரையும் சொல்லி பணம் திரட்டியவர்களுக்கு கூட இவர் இறந்தது தெரியாதாம்..

நான் இவருடன் தொடர்பில் இருந்தேன்.. தான் இறந்தால் அந்த செய்தியை சிவம் கச்சாய் பொடியனுக்கு அறிவியுங்கள் என்று சொல்லிவிட்டு இருந்தாராம்..

காரணம்; நன்றிக்கடன்.. அவரின் படகு ஒட்டும் வேலையை சுலபமாக்கினேன் அவ்வளவுதான்..

ஈழத்துக்காக தன் வாழ்க்கையில் அரை பங்கை செலவிட்ட தந்தை..

ஈழப்பற்றாளர்..

முல்லை யேசுதாசன், அன்புடன் சாமி அண்ணா என்று அழைக்கப்படும் ஓர்  உண்மையான ஈழ கலைஞன்.
ஈழ மண்ணில் ஓர் எளிமையான கலைஞன்.
தமிழீழத்தில் நான் பங்காற்றிய எல்லாளன் திரைப்படத்தின் திரைகதை மற்றும் வசனம் எழுதியதோடு நில்லாமல் நான் கிளிநொச்சியில் இறங்கிய மணித்துளி முதல் தமிழகம் பயணிக்கும் நொடி வரை ஒவ்வொரு நாளும் என்னுடன் பயணித்து எல்லாளன் முழு வடிவம் பெற, பல சூழல்களில் தன் உயிரையும் பொருட்படுத்தாது உழைத்த ஓர் மனிதன்.
முல்லைத்தீவில் இறுதி காட்சியின் படப்பிடிப்பிற்காக, சுனாமியால் சூரையாடப்பட்ட அவரது வீட்டிலேதான் 2 மாதம் தங்கியிருந்தேன். அவருடன் அந்த உச்சகட்ட போர் சூழலில் பல மணி நேரங்கள் உலக சினிமா, இலக்கியம், அரசியல், போரின் நீங்கா வடுக்களின் மறு பக்கங்கள், யுத்த கோரங்களுக்குள் பிறக்கும் காதல்களும் நட்புகளும் என்று அவருடன் நான் உரையாடியிருக்கிறேன்.
ஈழ நிலப்பரப்பிலும் புலம்பெயரந்த சமூகத்திலும் ஒரு சதத்திற்கும் பயண்பெறாத படைப்புகளை உருவாக்குகின்ற கலைஞர்களை கொண்டாடும் ஈழத்தமிழ் சமூகம் சாமி அண்ணன் போன்ற கலைஞர்களை அங்கீகரிக்க தவறிவிட்டது.
தான் உருவாக்கிய, பங்குபெற்ற படைப்புகளுக்காக எந்தவொரு கர்வமும், பெருமையும் தேடிக்கொள்ளாத ஓர் கலைஞன். கடைசி வரை கற்கும் தேடலை அவர் நறுத்தவேயில்லை. அவரின் இழப்பு ஈழ கலை துறையில் ஈடு செய்ய இயலாத இழப்பு.
என்றும் என் ஈழ நினைவுகளில் உங்களின் பக்கங்கள அதிகம், உங்களை தவிர்த்து என்னால் கடந்து செல்வதும் இயலாது.
-சந்தோசு

Please follow and like us:

163total visits,1visits today