ஒன்ராரியோ மாநில உறுப்பினர் விசய் தணிகாசலம் சிங்கக்கொடியேற்ற வாய்ப்பளித்ததேன்?

கனடா ஒன்ராரியோ மாநிலப் பாராளுமன்ற முன்றலில் 400 ஆண்டாக தமிழர்களை அழித்த சிங்களவர்கள் தமது அரசகொடியை 2020 பெப்ரவரி 4 ஆம் நாள் ஏற்றுவதற்கு சட்டஒழுங்குக்கு அமைய அனுமதி பெற்றிருந்தார்கள்

இதை அறிந்த கனடாவாழ் தமிழர்கள் ஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினர் விசய் தணிகாசலத்திற்குத் தெரிவித்திருந்தார்கள்.அத்தோடு அவை உறுப்பினராக இருக்கும் இந்நிகழ்வு பற்றிய அழைப்பும் விசய்க்கும் சிங்களர்கள் அனுப்பியிருக்கிறார்கள்.
இதை அறிந்த விசய் தணிகாசலம் தனக்கு கனடா மாநில அவையின் அரசியல் அதிகாரத்தை புரியாதவராக இருந்து மறுப்பு தெரிவிக்கவில்லையா?என்ற கேள்வியை மக்கள் எழுப்புகிறார்கள்.

கனடா அரசின் மாநில அவை உறுப்பினராக இருக்கும் விசய் தணிகாசலம் அவர்கள் 12கோடி தமிழர்கள் சார்பாக கனடா மாநில அவையில் தமிழருக்கான குரலாக இருக்கின்றார்.
12 கோடி தமிழர்களின் சிக்கலை பேசுவதற்கான வாய்ப்பு நிறையவே உண்டு.
ஆனால் விசய் தணிகாசலம் தெரிந்தும் தெரியாதமாதிரி இருந்தாரா?என்பது இன்னும் புதிராகவே இருக்கின்றது.

2 தமிழ் மாநில உறுப்பினர் தங்கள் அரசியலை செய்யாமல் சிங்கள அரசுக்கு உடந்தையாக இருந்தால் அது 12கோடி தமிழர்களின் வீரத்திற்கும் மானத்திற்கும் மிகப்பெரிய இழிவாகும்.

Please follow and like us:

115total visits,3visits today