12கோடி தமிழர்களுக்காக கனடா நடுவண் அரசின் உறுப்பினர் கரி ஆனந்த சங்கரிக்கு நன்றியும் வாழ்த்துகளும்

தமிழினப்படுகொலையாளரும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படாத சிங்கள இனவெறியரச நாட்டு முதல்வருமான கோட்டாவினால் காணாமல் ஆக்கப்பட்டடோர் இறந்துவிட்டார் என்று அறிவித்த செய்தியை கனடா அரச அவையில் வெளிப்படுத்திய கரி ஆனந்த சங்கரி அவர்களுக்கு 12கோடி தமிழர்கள் சார்பாக பறை ஊடகம் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவ்வப்போது சிங்கள இனவெறியரசால் வெளியிடப்படும் தமிழருக்கு எதிரான செய்திகளை கனடா அரசஅவையில் கரி ஆனந்தசங்கரி வெளிப்படுத்தவேண்டும்.

கரி ஆனந்தசங்கரியின் கனடாவில் உள்ள அரசியல் அதிகாரம் என்பது உலகில் வாழும் 12தமிழர்களை உள்ளடக்கியது.

கரி ஆனந்த சங்கரி தொடர்ந்து கட்சி பேதம் கடந்து தமிழர்களின் அரசியல் அதிகாரத்தை ஈழமண்ணில் பெறுவதற்கான சகல செயல்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை

தமிழர்களுக்கு இனப்படுகொலை நடந்தது என்பதை கனடா அரச மட்டத்தில் தீர்மானமாக கொண்டுவரவேண்டும்.

இனப்படுகொலைக்கான அனைத்துலக விசாரணை

தனித்தமிழீழ குடியரசுக்கான தமிழர்களுக்கிடையேயான அனைத்துலக வாக்கெடுப்பு

என்பன போன்ற அரசியல் செயல்பாடுகளைஉங்கள் பதவிக்காகாலத்தில் முன்னெடுக்கவேண்டும்.

கனடா அரசினூடாக ஐ.நா சபைக்கு கொண்டு செல்லவேண்டும்.

தமிழருக்கான ஆக்கபூர்வமாக மேலே சொல்லப்பட்ட அரசியல் செயல்பாட்டை முன்னெடுத்தால் 12 கோடி தமிழர்கள் மனதில் வாழ்வீர்கள்.

Please follow and like us:

234total visits,1visits today