தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்காததால்பெப்ரவரி 4 இல் சிங்களவர் சிங்கக்கொடி ஏற்ற ஒன்ராரியோ மாநில அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டது

சிங்களவர் தமது சிங்கள தேசிய சுதந்திர நாளில் தேசியக்கொடியை ஒன்ராரியோ மாநில பாராளுமுன்றலில் ஏற்றினார்கள்.அதற்கு பல தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.அந்த எதிர்ப்பின்போது புலிக்கொடி பிடிக்கவேண்டாம் என்று காவல்துறை சொன்னபோது புலிக்கொடி பிடிக்கவேண்டாம் என்பதை எழுத்தில் தருமாறு கேட்டபோது புலிக்கொடியை ஒரத்தில் வைத்து பிடிக்குமாறு காவல்துறை சொல்லியிருந்தது.

பின்பு ஒன்ராரியோ மாநில பாராளுமன்ற அவைத்தலைவர் தமிழ் உணர்வாளர்களே கலந்துரையாடிய போது சிங்கக்கொடி ஏற்றுவதற்கு தமிழர்  தரப்பில் இருந்து எதிர்ப்புத் தெரிவித்திருந்தால் சிங்கக்கொடி ஏற்ற ஒன்ராரியோ மாநில பாராளுமன்றம் அனுமதி வழங்கியிருக்காது என்பதைத் தெளிவாகச் சொல்லியிருந்தார்.

ஒன்ராரியோ மாநில முதல்வர் டக் போட் அவர்களுக்கும் சிங்களவர் சிங்கக்கொடியேற்றுவதற்கு எந்த எதிர்ப்பும் தமிழர் தரப்பில் இருந்து கிடைக்காததால் அனுமதி வழங்கியதாக சொல்லியிருக்கின்றார்.

தமிழ் உஉணர்வாளர்களின் உள்ளக்குமுறல்களை ஏற்றுக்கொண்ட ஒன்ராரியோ மாநில பாராளுமன்ற அவைத்தலைவர் தமிழ் உணர்வாளர்களை தமது அலுவலகத்தில் பேசுவதற்கு நேரத்தை ஒதுக்கிக் கொடுத்தார்.

அந்தவகையில் மக்கள் சார்பாக ரோயும் நா.க.த.அரசின் சார்பாக நிமால் விநாயகமூர்த்தியும் கனடாத்தேசிய அவையின் சார்பாக பிரபாவும் இ ளையோர் அமைப்பின் சார்பாக ஒருவருமாக நான்கு தமிழர்கள் ஒன்ராரியோ மாநில பாராளுமன்த் தலைவரை சந்தித்து 45மணித்துளிகள் பேசியிருந்தார்கள்.

இந்தப்பேச்சின் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமான செயல்பாடுகள் தமிழ் உணர்வாளர்களால் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்கள்.

கட்சிகளை நம்பியோ காசுக்காக அலையும் அமைப்புக்களை ஒரம்கட்டிவிட்டு மக்களாகிய நாமே தமிழருக்கான அரசியல் செய்ய அணிதிரள்வோம்.

Please follow and like us:

228total visits,2visits today