இனப்பெருமையோடும் மொழிப்பெருமையோடும் நிசான் துரையப்பா தமிழ் மரபுத் திங்கள் விழாவில்

2051 சுறவம் 11 ஆம் நாள் காரிக்கிழமை (Jan 24,2020) கனடா பிரம்ரன் நகரசபையால் தமிழ் மரபுத்திங்கள் விழா கொண்டாடப்பெற்றது.
இவ்விழாவில் பீல் பகுதி காவல்துறை தலைமை அதிகாரி, நிசான் துரையப்பா கலந்து சிறப்பித்திருந்தார். அவ்விழாவில் தமிழின் தமிழரின் சிறப்பை உணர்ந்து அதை திறந்த மனதோடு பகிர்ந்த உரை கீழே

என் அப்பா தமிழீழம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அம்மா தமிழீழம் மட்டக்களப்பு. நான் கொழும்பில் பிறந்தேன்.மிகச் சிறுவயதிலேயே கனடாவுக்குப் புலம்பெயர்ந்து வந்துவிட்டேன். என்னை ஓர் கணக்காளர், பொறியியலாளர் அல்லது மருத்துவர் ஆக்கிப் பார்க்கவே என் அம்மா விரும்பினார். அவர் ஒருமுறை விடுமுறைக்குச் சென்றிருந்த சமயம் நான் காவல்துறைக்கு விண்ணப்பித்திருந்தேன். விடுமுறையில் திரும்பி வந்த அம்மாக்கு அது அப்போது அதிர்ச்சியாய் இருந்தது.

என் மனைவி யேர்மன் நாட்டைச் சேர்ந்தவர். நான் வாழும் சூழல் மாறிவிட்டது. என் பண்பாட்டு விழுமியங்களை தொடர எனக்கு வாய்ப்புகள் இருக்கவில்லை. ஆனாலும், இப்போது மகிழ்கிறேன்; கனடா மண்ணில் வாழும் தமிழர்கள் தம் பண்பாடு, கலைகளை தொடர்ந்து பேணி வருகிறார்கள். நான் இழந்துபோனதாய் நினைத்த விடயங்களை மீண்டும் மீட்டித் தருகிறார்கள். நான் தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன்.

Please follow and like us:

309total visits,1visits today