ஒன்ராறியோ முது தமிழர் நலன்புரி சங்கத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா 2050

ONTARIO SENIOR TAMILS BENEVOLENT ASSOCIATION – (OSTBA)
EST. 2012. REG: NOT FOR PROFIT ORGANIZATION #1866873, ONTARIO, CANADA
ஒன்ராறியோ முது தமிழர் நலன்புரி இலாபநோக்கற்ற அமைப்பு # 1866873
………………………………………………………………………………………………………………………………………

A new office for Ontario Senior Tamils Benevolent Association (OSTBA)

ஒன்ராறியோ முது தமிழர் நலன்புரி (OSTBA) சங்கத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா
2012 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பீல் முது தமிழர் நலன்புரி (PSTBA) சங்கத்தின் முதன்மை நோக்கம் இறப்பு நன்கொடை நிதியை உருவாக்கி செயல்படுத்துவதாகும். இது சங்கத்தின் உறுப்பினரின் மறைவினால் ஏற்படும் இறுதிச் செலவுகளின் பெரும் சுமையை ஓரளவு நிவர்த்தி செய்யும்.
எதிர்காலத்தில்வேறும் பல மனிதாபிமான உதவிகளைச் சங்கம் வழங்கும். குறிப்பாக மோசமான இறுதி நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் . ஊனமுற்ற உறுப்பினர்களுக்கும், கடுமையான குறைபாடுகள் உள்ள நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்களுக்கும் உதவி செய்வதும் ஒரு நோக்கமாகும்.

இந்த நோக்கங்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் அடங்கலாக கூட்டுறவு மற்றும் இலாப நோக்கற்ற அடிப்படையில் அடையப்படும். சாசனத்தின்படி அறங்காவலர் குழுவினால் அடையாளம் காணப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு செயலிலும் சங்கம் ஈடுபடலாம், மேலும் அரச நன்கொடை , நல்ல மனமுள்ள நன்கொடையாளர்கள் ,மற்றும் பிற நிதி திரட்டும் நடவடிக்கைகள் மூலமாகவும் சங்கம் திறமையாகச் செயல் பட நிதி உதவி பெறலாம்.
2012 ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டபோது அது பீல்(PEEL) பிராந்தியத்தில் மட்டுமே இருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள முது தமிழர் சங்க உறுப்பினர்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்தும் அபிப்பிராயத்தோடு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் பெயர்(PSTBA) என்பதிலிருந்து (OSTBA) என மாற்றப்பட்டு, ஒன்ராறியோவில் ஆதாயமற்ற சங்கமாக ஆரம்பத்தில் பதிவு செய்த வணிக எண்ணுடன் பதிவு செய்யப்பட்டது. இதுவரை 7 ஆண்டுகளில், இந்த அமைப்பு 29 மறைந்த உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு

சுமார் 90,௦00 கனேடிய டாலர்களைச் செலுத்தியது. பல கேள்விகளுக்குப் பதிலளித்த பின்னர் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து பணத்தைப் பெறுவதை விட மிக விரைவாக எமது சங்கத்தில் இருந்து பயனாளி,
இறுதி நன்கொடைப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், சில நேரங்களில் காப்பீட்டாளர் இறப்பு காப்பீட்டின் போது காப்பீடு செய்யப்பட்ட தொகையை விட காப்புறுதி நிறுவனத்துக்கு அதிகமாகச் செலுத்தி இருக்கலாம். OSTBA இல் இணைவதால் சராசரி வருவாய் ஒரு உறுப்பினர் செலுத்திய தொகையை விட 10 மடங்கு அதிகம் கிடைக்கலாம். உறுப்பினர்தொகை 350ஐ எட்டினால், மற்றும் அனைத்து உறுப்பினர்களும்
இறப்பு அழைப்பு பணத்தை சாசனத்தின் படி செலுத்துவர் எனில் , உறுப்பினரால் நியமிக்கப்பட்ட பயனாளி ஒருவர், நலன்புரி சங்கத்தின்(OSTBA) செயல்பாட்டுச் செலவுக்கு 15% தக்கவைத்த பிறகு 6190 டாலர்களை உடனடியாகப் பெறும் வாய்ப்பு உண்டு
ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள முது தமிழ் சங்கங்களின் ஒரு பெரிய சந்தைப் பிரிவை உள்ளடக்கும் என்பதால் PSTBA இலிருந்து OSTBA என ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பெயர் மாற்றப்பட்டது. அரசியலமைப்பின் படி 60 வயது தொடங்கி 80 வயதுக்குட்பட்ட உறுப்பினர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. Www: Ostba.ca என்ற இணைய தளத்தில் உள்ள அரசியலமைப்பைப் பார்க்கவும் அல்லது விவரங்களுக்கு ostba2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பவும். இன்றுவரை பிரம்டன், மிஸ்ஸிசாகா, மார்க்கம் மற்றும் ஸ்கார்பரோ விலிருந்து 251 உறுப்பினர்கள் OSTBAயில் உள்ளனர்.. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் நிர்வாக அறங்காவலர் குழு தேர்ந்தெடுக்கப்படுகிறது வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதாக
அணுகுவதற்கு ஏற்ப OSTBA தனது அலுவலகத்தை கீழே தரப் பட்ட புதிய இடத்துக்கு மாற்றியுள்ளது. தற்போது சங்கம் ஒரு புதிய அர்த்தமுள்ள சின்னம் (லோகோ), மின்னஞ்சல், முகவரி, தொலைபேசி எண் மற்றும் வலைத்தள முகவரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த அலுவலகம் செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 11.00 மணி முதல் மாலை 3 மணி வரைசெயல் படும் . இந்த சங்கம் பேஸ்புக்(Face Book) என்ற முகநூல் மற்றும் ostba.ca வலைத்தளத்தைக் கொண்டுள்ளது. OSTBA இன் வருடாந்த இயச் செலவுக்காக வருடாந்திர சஞ்சிகை ஒன்றை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

ஒரு உறுப்பினரின் மறைவின் போது, ​​நியமிக்கப்பட்ட பயனாளிக்கு சங்க அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உறுப்பினர்களிடமிருந்து இறப்பு அழைப்புப் பணமாகப் பெறப்பட்ட தொகையில் 85% வழங்கப்படுகிறது. தக்கவைக்கப்பட்ட தொகை 15% சதவீதம் அலுவலக வாடகை, கூட்டத்திற்கான இட (HALL) வாடகை, தொலைபேசி, இணையம். தபால் மற்றும் அலுவலக செலவுகள் போன்ற செயல்பாட்டு செலவுகளுக்காக ஒதுக்கப் படும்

OSTBA யின் புதிய அலுவலகம் 2019 அக்டோபர் 8 ஆம் தேதி காலை 11.40 மணிக்கு OSTBA இன் தலைவரால் நாடா வெட்டப்பட்டு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு முது தமிழர் அமைப்பின் உறுப்பினர்களால் மங்கள விளக்கேற்றி ஆரம்பிக்கப் பட்டது . கனேடிய தேசிய கீதம், தமிழ் தாய்வாழ்த்து இசைக்கப்பட்ட்து

மறைந்த உறுப்பினர்கள், மாவீரர் மற்றும் ஈழப் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஒரு மணித்துளி அமைதிவணக்கம் செய்து மதிப்பளிக்கப்பபெற்றது.இதைத் தொடர்ந்து சங்கத் தலைவர், முன்னாள் சங்கத் தலைவர், மற்றும் வேறு பல முது தமிழர் சங்க உறுப்பினர்களும் உரை நிகழ்த்தினர் . சிற்றுண்டி வழங்கப்பட்டது. விழா மதியம் 1,30 மணிக்குஇனிதே முடிவுற்றது.

சங்க உறுப்பினர்களும், சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர விரும்புவோரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலில் தொடர்பு கொள்ளாம் . நிர்வகிக்கக்கூடிய சங்க எண்ணிக்கை 350 என வரையறுக்கப் பட்டுள்ளது. உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட சாசனத்தின் படியும் மற்றும் உறுப்பினர்களால் நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழுவால் நிர்வகிக்கப்படும். அரசியலமைப்பின் படியே சங்கம் செயல்படும். ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள தமிழ் மூத்தவர்களுக்கு சேவை செய்ய நலம் விரும்பிகளின் ஆர்வமுள்ள ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது
தொடர்பு தகவல்:
அலுவலக இடம்: அறை 215, 3085 கோரோன்டாரியோ தெரு, மிசிசாகா. ON. L5A 4E4
தொலைபேசி: 647 795 0504 மின்னஞ்சல்: ostba2019@gmail.com. வலைத்தளம்: ostba.ca

OSTBA அறங்காவலர் குழு
12 ஒக்டோபர் 2019

———————————————————————————————————
3085 Hurontario St, Unit 215, Mississauga, ON, L5A 4E4 – Tel: 647 795 0504 – Email: Ostba2019@gmail.com, Web :Ostba.ca

Please follow and like us:

159total visits,1visits today