தமிழர் இயக்கம் அழைக்கிறார்கள்


 வணக்கம்!

இவ் குழுமம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் தமிழர்களின் இறைமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் தமிழீழத்தில் தமிழர்களுக்கு இடம்பெற்ற இனவழிப்பு மற்றும் தொடர்ந்தும் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டமைப்புசார் இனவழிப்பு அத்துடன் தமிழீழம்,தமிழகம் மற்றும் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் எதிர்நோக்கும் மனித உரிமைப் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு நீதிகேட்டு பன்னாட்டு அரங்குகளில் தமிழர் தரப்பினரால் முன்னெடுக்கப்படும் மற்றும் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பான தகவல்ளைப் பகிர்ந்துகொள்ளவும் அதுதொடர்பாக விவாதிப்பதற்குமே ஆகும்.

இக்குழுவில் பல்வேறு கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைத் தளங்களில் செயற்படும் செயற்பாட்டாளர்கள் எம்மால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் எம்மோடு இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். காலத்தின் தேவைகருதி எம்மால் முன்னெடுக்கப்படும் இவ் வேலைத்திட்டங்களில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைக் கடந்து அனைத்துத்தரப்பினரும் ஓரணியில் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எமது வேணவா. ஏற்கனவே தேவையற்ற சில பதிவுகளால் இக்குழுவில் இருந்து சிலர் விலகிச் சென்றுவிட்டார்கள். எனவே இனிவரும் காலங்களில் குறிபிட்ட அரசியல் மற்றும் அமைப்புக்கள் தொடர்பான செய்திகளையோ விமர்சனப் பதிவுகளையோ தவிர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி
தமிழர் இயக்கம்

https://m.facebook.com/tamilmovement/videos/524325081689839/?sfnsn=mo&d=n&vh=e

Please follow and like us:

663total visits,1visits today