லிபரலும் கனடாத் தமிழர்களை கைகழுவிவிட்டதா?

2051 மடங்கல் 29ஆம் நாள் திங்கட்கிழமை(Sep14,2020  )

Monday ,Ottawa ,Canada.

இன்று கனடா ஒன்ராரியோ பிரம்மன் நகரத்தில் இருந்து நான்கு தமிழ் உறவுகள் சிங்கள இனவெறியரசால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு கனடா அரசிடம் நீதி கோரி 420கிலோமீற்றர் தூர நீண்டநடையுலாவில் ஒட்டோவா நகரைவந்தடைந்தார்கள்

வைசீகமாபதி யோகேந்திரன்

டேவிட் தோமசு

வரதராசன் வியிதரன்

மகாலிங்கம் மகாயெயம்

இன்று கனடா கியூபெக் மாநிலம் மொன்றியால் நகரத்தில் இருந்து மூன்று தமிழ் உறவுகள் சிங்கள இனவெறியரசால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு கனடா அரசிடம் நீதி கோரி 220கிலோமீற்றர் தூர நீண்டநடையுலாவில் ஒட்டோவா நகரைவந்தடைந்தார்கள்

யோகேசுவரன்  நடேசு

வீராசாமி குலேந்திரசிகாமணி

நமசிவாயம் விசயகுமார்

ஒன்ராரியோ கியூபெக் மாநில தமிழர்கள் ஒன்றாக கனடா நாடாளுமன்ற முன்றலில் கூடினார்கள். கூடிய தமிழர்களின் மிகுந்த ஏமாற்றத்துடன் கரி ஆனந்தசங்கரியிடம் மனுவைக் கையளித்தார்கள்.

இந்த நிகழ்வில் லிபரல் கட்சியிலிருந்து கரி ஆனந்தசங்கரியைத் தவிர வேறு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

Please follow and like us:

208total visits,2visits today